Wednesday, August 1, 2018

மேலதிக ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தடை...!

, 01 AUGUST 2018

அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் ஈடுபடுத்தி அவர்களுக்கு வேதனம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கு பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இந்த சுற்று நிரூபத்தினை மீறும் வகையில் ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்டால் உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment