19.08.2018
பாடசாலை ஆசிரியர்களின் சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், பாடசாலை ஆசிரியர்களின் சம்பளங்கள் குறைக்கப்படாது. அவர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை மேலும் அதிகரிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை சிலர் குரோத உணர்வுடன் நோக்குகின்றனர்.
குறுகிய அரசியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் சிலர் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment