02.08.2018
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி, தற்போது முதுமை காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழுக்குத் தொண்டாற்றிய கலைஞர், தீவிர அரசியலோடு சினிமாவிலும் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக்கொண்டு தள்ளாத வயதிலும் தனது கட்சிக்குத் தொண்டாற்றுகையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு காரணமாக, அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்பினால் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது அபிமானிகள் தொடக்கம் பிரபல அரசியல்வாதிகள் தொட்டு திரையுலகம் சார்ந்தவர்கள் வரைக்கும் காவேரி மருத்துவமனைக்கு படையெடுக்கின்றார்கள். இந்த நிலையில், இயக்குனர் சிவாவின் படமான "விசுவாசம்" திரைப்படத்தில் ஓய்வில்லாமல் நடித்து வரும் 'தல'அஜித், கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையை அறிந்ததும், காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் தொடர்பில் அவரின் மகனும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து கேட்டு அறிந்துகொண்டிருக்கின்றார்.
அதேவேளை, காவேரி மருத்துவமனைக்கு நேற்றையதினம் காலையில் சென்ற நம்ம 'தளபதி' விஜய்யும், கலைஞர் கருணாநிதி தற்போது உள்ள நிலை குறித்து நேரில் சென்று சுகம் விசாரித்தார் என்கின்றது விஷயம் அறிந்த தரப்பு.






0 comments:
Post a Comment