Saturday, August 18, 2018

பிரதமரின் அதிரடி நடவடிக்கை...!!

, 18 AUGUST 2018

வடக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்க தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற வீடமைப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் துறையில் 10 ஆயிரம் விடுகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மலையகத்தில் மகாத்மா காந்திபுரம் என்ற முதற்கட்ட வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் மேலும் 10 ஆயிரம் வீடுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்த நிகழ்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment