Sunday, August 19, 2018

அரச சேவையில் மேலும் 4,130 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று

August 20, 2018

அரச சேவைக்கு 4,130 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறும்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு மூன்று வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்நாட்களில் பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

'மூச்செடுத்த மூன்று வருடங்கள்' என்பது மூன்றாவது நிறைவாண்டின் தொனிப்பொருளாகும்.
2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

தற்போது அதன் பயன்களை மக்கள் பெற்று வருகின்றனர். பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதும் இந்த வேலைத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாகும்.

6,500 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு காலி பத்தேகம பொது விளையாட்டு மைதானத்தில் பிரதமர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

Battinews

0 comments:

Post a Comment