Friday, August 3, 2018

11 வயது சிறுமியை பாலியல், வல்லுறவுக்கு உட்படுத்திய சட்டத்தரணி கைது - ஆராட்சிக்கட்டுவயில் அசிங்கம்

August 03, 2018 

11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 52 வயதான நபரை ஆராச்சிக்கட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டு - ரஜகந்தஹெலுவ பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி இந்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்து வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயனிக்கும் போது அணியும் தலைகவசம் ஒன்றை வாங்கி வருமாறு கூறி, சிறுமியை சந்தேக நபரின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

அப்போது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள சந்தேக நபர், இது குறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனக் கூறி, சிறுமிக்கு 100 ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் மூன்று வாரங்களுக்கு பின்னர், சிறுமி தான் எதிர்நோக்கிய சம்பவத்தை தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய், ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர், சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna Muslim  

0 comments:

Post a Comment