August 2, 2018
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் இந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமானதாக அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
கலிபோனியாவின் வரலாற்றில் ஏற்பட்ட 6 ஆவது பேரழிவாக நடப்பு கோடைப் பருவத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பாதிப்பு மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அம்மாகாணத்தின் தீயணைப்புத்துறை கூறியுள்ளது.
கலிபோனிய வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து, ஆண்டு தோறும் புதிய பாடங்களைக் கற்றுத் தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 38 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வெளியேறி இருப்பதாகவும், 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
களஞ்சியசாலைகள் உட்பட 488 கட்டிடங்கள் இன்னமும் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஜூலை 23 ஆம் திகதி தொடங்கிய இந்த தீயில் 121,000 ஏக்கர் அழிந்துள்ளன. 38,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.






0 comments:
Post a Comment