02 AUGUST 2018
2018 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 03 ஆயிரத்து 50 பரீட்சை மத்திய நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 03 லட்சத்து 55 ஆயிரத்து 326 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதலாவது வினாத்தாள் 45 நிமிடங்கள் என்பதுடன் 09.45 க்கு ஆரம்பமாகவுள்ளதுடன், 2வது வினாத்தாள் 10.45 க்கு ஆரம்பிக்கவுள்ளது.
இதனிடையே பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 09 மணிக்கு பரீட்சை மத்திய நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதுடன், மாணவர்களின் பெற்றோர்கள் பரீட்சை மத்திய நிலையங்களிற்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment