பாகிஸ்தான் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் முன்னிலையில் உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு 272 பேரைத் தெரிவு செய்வதற்கு இன்று நடாத்தப்பட்ட தேர்தலில் 3,459 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342 பேர் ஆகும். இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 ஆசனங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை தரப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே, அந்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ பாராளுமன்றத்தில் 172 ஆசனங்களை வென்றாகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment