Wednesday, July 25, 2018

அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின பேக்கரி உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வும் வருடாந்த ஒன்றுகூடல்

25.07.2018

அம்பாறை மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு சுவையான , சுத்தமான , சுகாதாரமான பேக்கரி உற்பத்திப் பொருட்களை வழங்குவது சம்பந்தமாக மூவின பேக்கரி உரிமையாளர்களுக்கும் விளக்கமளிக்கும் செயலமர்வும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் அண்மையில் சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் கல்முனை ஹனீப் ஸ்டோர்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.ஹனீப் தலைமையில் இடம்பெற்றது.

பிரமிட் வில்மர் எண்ணை மற்றும் கொழுப்பு உற்பத்தி நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரியந்த கொலனகே , தேசிய விற்பனை முகாமையாளர் பீ.என்.ஜே.பெர்னான்டோ , விற்பனை முகாமையாளர் நளின் அமரசிங்க , கிழக்கு பிராந்திய விற்பனை முகாமையாளர் பீ.ஜெகனாந் , அம்பாறை மாவட்ட விற்பனை பிரதிநிதி ஏ.ஹவாஸ் உட்பட நிறுவனத்தின் முக்கியஸ்தர் பலரும் பேக்கரி உரிமையாளர்களும் மொத்த விற்பனை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரமிட் வில்மர் எண்ணை மற்றும் கொழுப்பு உற்பத்தி நிறுவனத்தின் பொது முகாமையாளர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பேக்கரி உரிமையாளர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டன.

நன்றி -
எம்.ஐ.எம்.அஸ்ஹர்

0 comments:

Post a Comment