, 25 JULY 2018 -
ஜின்தொட்ட மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களால் சேதமடைந்த சொத்துக்களின் உரிமையாளர்களுக்கும் மதஸ்தலங்களுக்கும் நட்டயீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜின்தொட்டையிலும் இந்த ஆண்டு அம்பாறையிலும் இடம்பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நட்டயீடு வழங்கப்படவுள்ளது.
இந்த யோசனையை அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் முன்வைத்திருந்தார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய வீடமைப்பு திட்டத்தை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்களுக்கான தீர்வினை பிரதமர் ரணில் விக்கரமசிங்க அடுத்த அமைச்சரவையில் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வீட்டுத்திட்டம் சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்தியா எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இது தொடர்பில் உரிய தரப்புடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி, தமது தீர்வினை அடுத்த அமைச்சரவையில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment