Tuesday, July 17, 2018

அமீத் வீரசிங்க, உண்ணாவிரதத்தை கைவிட்டான்

July 17, 2018 

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க இன்று போராட்டத்தைக் கைவிட்டதாக தெரியவருகிறது.

கண்டியில் ஏற்பட்ட கலவரத்திற்கு முக்கிய சூத்திரதாரியான இவர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமீத் வீரசிங்க, தம்மை விடுவிக்குமாறு கோரி கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

எனினும், இன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கான காரணம் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கண்டி வன்முறையில் ஈடுபட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு பிணை வழங்குமாறு சிங்கள தேசிய அமைப்பின் தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றுத் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment