July.25.2018
இலங்கையின் பிரபல நடிகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை சிங்கள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மரணத்திற்கு, அவர் பயன்படுத்திய மாத்திரை காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிரபல சிங்கள நடிகரான 37 வயதான இந்திக்க கினிகே நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்திக்க ஏற்கனவே குறித்த மாத்திரையை பயன்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் அதனை பயன்படுத்தியமையால், நேற்று முன்தினம் இந்திக்க கினிகே தனது வீட்டில் உயிரிழந்திருந்தார்.
மூடப்பட்டிருந்த மகனின் அறை கதவை உடைத்து பார்க்கும் போது மகன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார் என இந்திக்கவின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்திக்க கினிகேவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment