மொபைல் ஃபோன் டெக்னீசியன் ஒருவர் 1 லட்சம் திர்ஹாம்களை வழங்கவில்லை என்றால், அவரது தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக ஒரு அமீரகப் பெண்னை மிரட்டியுள்ளார். இந்நபருக்கு O3 வருட சிறை தண்டனையை வழங்கி
அபுதாபி நீதி மன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
சிரியாவை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பாதிக்கப்பட்ட தாயின் செல்போனுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்த பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களையும் தனிப்பட்ட தகவல்களையும் அவர் வைத்திருப்பதாகவும், அவர் பணம் தரவில்லை என்றால் அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாகவும் அதில் எழுதப்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசாரிடம் புகார் செய்தனர், பொலிஸார் இந்த விஷயத்தை விசாரித்து, அந்த நபரை கைது செய்தனர்.
கலீதியா பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் ரிப்பேருக்காக தனது மொபைல் போனை கொடுத்த பொது தான் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் தனது தகவல்களையும், புகைப்படங்களையும் எடுத்திருக்க வேண்டும் என்று அந்த பெண்மணி போலீசில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த அபுதாபி குற்றவியல் நீதிமன்றம், மூன்று வருட சிறைதண்டனை விதித்து, அந்த குற்றவாளி பின்னர் அமீரகத்தை விட்டு வெளியேற்றப்படும்படி உத்தரவிட்டார்.
நன்றி
(கல்ப் தமிழ் இணையம்)






0 comments:
Post a Comment