Wednesday, July 25, 2018

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

, 25 JULY 2018

நாளை மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கல்வி சார் ஊழியர்கள் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திட்டமிட்டப்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டம் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

0 comments:

Post a Comment