Tuesday, July 24, 2018

ஜப்பானில் நிலவும் அனல் காற்று – இதுவரை 65 பேர் பலி

July 24, 2018

கடந்த இரு வாரங்களாக ஜப்பானில் நிலவும் அனல் காற்று காரணமாக சுமார் 65க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனல் காற்று காரணமாக சுமார் 22,000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜப்பானில் அதிக வெப்பநிலையாக, குமகயா நகரில் 41.1C செல்ஸியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகியிருந்தது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம் வரை 35C செல்ஸியஸ் வெப்பநிலை தொடரக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இதனை ஒரு இயற்கை அனர்த்தமாக பிரகணடனப்படுத்த ஜப்பான் வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

0 comments:

Post a Comment