22 JUNE 2018
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் , கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிலையான உத்தரவிற்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இந்த தெரிவுக் குழுவில் சபாநாயகர் , பிரதமர் , சபைத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அதிகாரபூர்வமாக செயற்படுகின்றனர்.
அதற்கு மேலதிகமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






0 comments:
Post a Comment