22 JUNE 2018
சிறுத்தையை கொலை செய்த நபர்களை கைது செய்ய உத்தரவு
கிளிநொச்சி பிரதேசத்தில் பிரதேசவாசிகள் சிலரால் சிறுத்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் காவற்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்காக , காணொளி காட்சிகளை பயன்படுத்துமாறு நீதிமன்றம் காவற்துறைக்கு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் , குறித்த சிறுத்தை பிரதேசவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக கிராமத்தில் புகுந்த சிறுத்தை பிரதேசவாசிகள் சிலரை தாக்கியிருந்தது.
இதன்போது , 10 பேர் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் ,வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தனர்.
இந்நிலையில் , சிறுத்தை மற்றுமொரு நபரை தாக்க முற்பட்ட போது பிரதேசவாசிகள் இணைந்து சிறுத்தையை சரமாரியாக தாக்கி கொலை செய்திருந்தனர்.
இதன்போது பதிவு செய்யப்பட்டிருந்த காணொளி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வௌியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.






0 comments:
Post a Comment