17 JUNE 2018
அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட அலுவலக பணியாளர்களுக்கு மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் பொறுப்பு கூறவேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த பணியாளர்களுக்கான வேதன கொடுப்பனவு தொடர்பான பொறுப்பை, குறித்த நிறுவனத்தின் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் கணக்காய்வாளர்கள் ஏற்க வேண்டும்.
அதுபோல் அரச கூட்டுத்தாபனம் சட்டரீதியான சபை மற்றும் முழுமையான அரச நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய கொடுப்பனவுகளை உரிய காலத்தில் கொடுக்க வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளின் பொறுப்பு எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த சுற்றறிக்கை திறைச்சேரியின் கீழ் இயங்கும் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் ஊடாக எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் நிதியமைச்சு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment