Sunday, June 17, 2018

2020 ஆகின்ற போது நாட்டில் மேலும் 33 பிரதேச செயலகங்கள் நிறுவப்படும் என தெரிவிப்பு


June.17.2018

2020 ஆகின்ற போது நாட்டில் மேலும் 33 பிரதேச செயலகங்கள் நிறுவப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் தற்போது 332 பிரதேச செயலகங்கள் உள்ளன.

அவற்றின் கட்டுமான நடவடிக்கைகளும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆகின்றபோது நிறைவு செய்யப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது உள்ள 5 பிரதேச செயலகங்களுடன், மேலும் ஐந்து பிரதேச செயலகங்கள் இணைக்கப்படவுள்ளது.

அத்துடன், காலி மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் 22 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment