Sunday, June 17, 2018

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நபருக்கு ஏற்பட்ட மோசமான நிலை: நடந்த அதிர்ச்சி சம்பவம்

June 17, 2018
   
தமிழகத்தில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு சுபின் (21), சுமிதா (19) என்ற பிள்ளைகள் உள்ளனர்.

பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததால், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

தனிமையில் இருந்த இவர் எந்த நேரமும் மது அருந்துவதும் பல பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடுவதுமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மனைவியுடன் விவாகரத்து செய்ததால், சரியாக வீட்டிற்கு செல்லாமல் இரவு நேரங்களில் கோயில்கள் போன்ற இடங்களிப் படுத்து உறங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள தோட்டத்தில் இன்று கழுத்து மற்றும் மார்பு பகுதி அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஜோன்ஸ் சடலமாகக் கிடந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிட்ந்த இவரை பார்த்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடலை பார்த்த போது, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஜோன்ஸுக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்த காரணத்தால் சிலருடன் அவ்வப்போது தகராறும் இருந்து வந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment