Sunday, June 24, 2018

சிறுத்தை கொலை – கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்

, 24 JUNE 2018 -

கிளிநொச்சி – அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் இந்த மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாள்குளம் பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபரொருவர் நேற்றைய தினம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டதுடன் மற்றும் ஓர் நபர் காவற்துறையில் சரணடைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment