Sunday, June 24, 2018

உணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி -

, 24 JUNE 2018

அம்பலாந்தொட்டை நகருக்கு அருகில் மல்பத்தேவ பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் பெண்ணொருவர் வாங்கிய கொத்து ரொட்டியில் தவளையொன்றின் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று(22) இரவு அவர் உணவிற்காக இந்த கொத்து ரொட்டியை வாங்கி உண்ண சென்ற வேளையே இந்த தவளையை அவதானித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண், பின்னர் இது தொடர்பில் உடனடியாக சுகாதார மருத்துவ அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று(24) காலை சுகாதார அதிகாரிகள் அந்த உணவகத்தை பரிசோதனை செய்துள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் உணவகத்தின் உரிமையாளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள சுகாதார அதிகாரிகள், கொத்து ரொட்டியை பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

உணவகத்தை நடாத்தி சென்ற பெண், நாளைய தினம் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Hiru News

0 comments:

Post a Comment