Friday, June 22, 2018

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்..!

, 22 JUNE 2018 -

சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார் என சிறைச்சாலை பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரிடம் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்திறன் தீர்ப்பு சிறைச்சாலைக்கு கிடைக்க பெற்றவுடன் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலகொடஅத்தே  ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று இரண்டாவது தடவையாக ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆராயப்படவுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி குறித்த மேன்முறையீட்டு ஆராயப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அன்றைய தினம் சமூகமளிக்காததன் காரணமாக அது தொடர்பான ஆராய்வு இன்று பிற்பகல் 2 மணி வரை பிற்போடப்பட்டமை குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment