Friday, June 15, 2018

அங்கே பலர் பிறையை தேடிக்கொண்டிருக்கும் போது…





15.06.2018

நேற்று இப்தார் செய்வதற்காக #குடியிருப்பிலிருந்து
வந்த மூவரும் அவரது குடும்பத்தாரும் #அக்கரைப்பற்று #கடற்கரையில் அமைந்திருந்த
#அந்நூர்பள்ளிக்கு முன்பாக அமர்ந்து நோன்பு திறந்த பின்னர் தான் அந்த #பிறையை கண்டதாக சொல்லியுள்ளார்.

#அதேநேரம் அந்த #பள்ளியின்
#மூன்றாம்தளத்திலிருந்து #மூவர்பிறைபார்க்க நின்றிருந்தனர் மூன்றாம் மாடியில் நின்றவர்களுக்கு பிறை தெரியாத நிலையில் அதில் இருவர் தொழுகைக்காக கீழிறங்கி வந்த நிலையில் ஒருவர் தொடர்ந்தும் அவதானித்துக்கொண்டிருந்தார் அவரும் பிறையை காணவில்லை……..

இது இப்படியிருக்க இரவு 11 மணியளவில் அவரோடு தொலைபேசியில் 3ம் மாடியில் பிறை தேடியவர் தொடர்பு கொண்ட போது ….

தான் அந்த #பிறையை #கண்டபின்தான் #மஹ்ரிப் #தொழுகைக்காக #வந்திருந்தாராம்
அப்போது அவரிடம் கேட்கப்பட்டது

நீங்கள் கண்ட பிறையை தொழுகை முடிந்த பிறகு பள்ளியில் தொழவந்த மக்களிடமோ நிர்வாகத்திடமோ சொல்லியிருக்கலாமே/சொல்லியிருக்கவேண்டுமே என்றதற்கு …..

அவர், தனது பிள்ளைகள் காத்துக்கொண்டிருந்ததால் அவசரமாக போய்விட்டேன்,

அல்லாஹ் நாடியவர்கள்தான் பிறையை பார்ப்பார்கள் என்றாராம்…..

(அவரோடு தொலைபேசியில் உரையாடியவர் #மூன்றாம் #மாடியில் பிறை தேடி காணாமல் கீழிறங்கியவர்)
அதுபோக……

#நானும் பிறை தேடி மேற்கு அடிவானம் தெளிவாக தெரியக்கூடிய ஊரின் மேற்கு எல்லையான வெள்ளப்பாதுகாப்பு வீதிக்கு சென்றேன் (அடிவானமானது ,கடற்கரையில் நின்று பார்பதைவிடவும் ,கடற்கரையிலே உள்ள மூன்றாம்மாடியில் நின்று பார்பதை விடவும் தெளிவாக தெரியக்கூடிய மேற்குப்பகுதி)
நான்போகும் போது ,

அங்கே பலர் பிறையை தேடிக்கொண்டிருந்தனர். நின்றிருந்தனர்.

அதிலே ஒரு இளைஞன் கையிலே ஸ்மாட் போனில் தான் போட்டிருந்த app மூலம்
மேற்கு வானை நோக்கி பிடித்து சந்திரனின் பாதையை காண்பித்து
Sir
சந்திரன் அடிவானத்தில் தோன்ற இன்னும் சில நிமிடம்கள் உண்டு,
ஆனால் அடிவானம் இருளாக இருப்பதால் தெரியாதென்றான்
அருகில் எனது நண்பர் நாஸர் சேரும் மகனோடு வந்திருந்தார்.

அந்த நேரம் அக்கரைப்பற்றில்
பிறை தெரியக்கூடிய அடிவானத்தில் இருள் சூழ்ந்திருந்ததை நான் மட்டுமல்ல ஆயிஸா பள்ளிக்கு தொழவந்த பலரும் ஏற்றுக்கொண்டனர்.

வீடு திரும்பி வரும் போது மேற்கு அடிவானில் இருள் சூழ்ந்த மேகத்துக்கு சற்று மேலாக #ஒளிக்கீற்றுப்போல ஒன்றை நானும் எனது மகனும் கண்டேன் சைக்கிளை நிறுத்திப்பார்த்தேன் அது #பிறையல்ல அது மேகத்துக்கு மேலாக தெரிந்த வெளிச்சம் என்பதை உறுதி செய்தேன்.

#அல்லாஹூஅஹ்லம்

Fas Ag

ஒரே ஒரு doubt.

இதுவரை காலமும் பிறை பார்க்கச் சென்ற எல்லொரும் பிறை பார்த்து தான் நாம் பெருனாள் கொண்டாடினோமா? பிறை பார்க்கச்செல்லும் எல்லோருக்கும் பிறை தென்படனுமா?

அக்கரைப்பற்றில் உள்ள மூவர் ஒருவேளை பொய் சொல்லி இருக்குரார்கள் என்றே வைத்துக்கொள்வோம் திஹாரி, மன்னார், நீர்கொழும்பு, மாவனெல்லை இங்கு உள்ள எல்லோரும் ஒருமித்து பொய் சொல்கின்றனரா??

2011 ல் கிண்ணியா வில் கண்ட பிறையை ஏற்காத இதே உலமா சபை பின்னர் மன்னிப்பு கேட்டனர். இது 2005 லும் நடந்தது. நீங்கள் சொன்னது போல் #அல்லஹ்வஹ்லம்.

But உலமா சபையின் system பிழை என்பதில் 100 வீதம் உறுதியாகவுள்ளேன். நேற்று பிறை தென்படுவதற்கான சகல சாத்தியங்களும் இருந்தும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பிறை குழு.

பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு கூடி பம்மாத்து காட்டிய விடயம். ஏர்க்கனவே சனி அல்லது ஞாயிறு பெருனாள் என்று தீர்மானித்து இப்படி படம் காட்டும் விடயம் கண்டிக்கத்தக்கது.

நன்றி - அனுப்புனர்

&Riyard Mohideen

0 comments:

Post a Comment