Friday, June 15, 2018

கந்தளாயில் தௌஹீத் அமைப்பினரால் பெருநாள் தொழுகை


15_06.2018

திருகோணமலை மாவட்டத்தின் நோன்பு பெருநாள் சர்ச்சையை அடுத்து கந்தளாய் பிரதேசத்தில் தௌஹீத் அமைப்பினரால் ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை (15) காலை 6.30 மணியவில் திறந்த வெளியில் வைத்து பெருநாள் தொழுகைகள் நடைபெற்றது.

இலங்கையின் மதுரங்குளி,புத்தளம்,மற்றும் தென் மாகாணம் போன்ற பகுதிகளில் பிரை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலே இன்று கந்தளாயில் பெருநாள் தொழகைகள் ஜாமியுத் தௌஹீத் பள்ளியில் நடாத்தப்பட்டது நூறிற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

தொழுகையினையும் ,ஜும்ஆ பிரசங்கத்தினையும் ஜாபீர் மௌலவி நடாத்தினார்.

எப்.முபாரக்

0 comments:

Post a Comment