Friday, June 15, 2018

பெற்றோரால் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்கள்

15 JUNE 2018




இலங்கையில் ஒன்று தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுள் 73.4 சதவீதமானவர்கள் வீட்டில் பெற்றோரால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தொடக்கம் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுள் 48.7 சதவீதமானவர்கள் முன்பள்ளிக்கு செல்கின்றனர்.

இதன்ஊடாக அவர்களது மொழியாற்றல், சமுக இணைப்பு, உணர்வு ரீதியான முன்னேற்றங்களுக்கு சாதக நிலைமை சேர்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5 வயதுக்கு குறைவானவர்களில் 17 சதவீதமானவர்கள் வறுமையில் வாடும் அச்சுறுத்தல் இருப்பதுடன், 15.1 சதவீதமான சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment