Saturday, June 23, 2018

நேற்று பதவியேற்ற பிரதமர் மீது இன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்


June 23, 2018

எத்தியோப்பியாவின் புதிய பிரதமர் அபீ அஹமட் கலந்துகொண்ட பொதுக் கூட்டமொன்றை இலக்குவைத்து இன்று (23) தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் பிரதமர் அவ்விடத்திலிருந்து பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் இத்தாக்குதலில் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அபீ அஹமட் எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக நேற்றைய தினம் (22) நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment