Saturday, June 23, 2018

இறக்காமம் அஸ்றம் காஸிம் எழுதிய மருத்துவக் கவிதைகள் (படங்கள்)

23.06.2018

இறக்காமம் அஸ்றம் காஸிம் எழுதிய மருத்துவக் கவிதைகள் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று23 சனி இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

நோய்களை விரட்டியடிக்கும் நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கையான ஆரோக்கிய மருந்து மூலிகைகள் மற்றும் உணவு வகைகள் அடங்கிய மருத்துவ கவிதைகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல் .எம். அதாஉல்லா பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் ஜனாதிபதியின் இணைப்பாளர் ரீ.றெபாய்டீன் பிறை FM அறிவிப்பாளர் எஸ்.ரபீக் இறக்காமம் ஜும்ஆ பள்ளி தலைவர் றஊப் (மௌலவி)
உட்பட ஏனைய பிரமுகவர்கள்  பொதுமக்கள்அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



0 comments:

Post a Comment