Friday, June 15, 2018

நாட்டுக்கான எமது சேவைக்கு இதுதான் பரிசு- தனது தண்டனை குறித்து ஞானசார தேரர்

June 15, 2018 5


நாம் இந்த நாட்டுக்காக செய்யும் கடமைக்கு கிடைப்பது தண்டனையும், இகழ்ச்சியும் மட்டும் தான் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
நாம் இந்த நாட்டுக்காக செய்யும் பணிக்கு எமக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. உயர்ந்த சம்பள கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனையும், ஏச்சும், இகழ்ச்சியும், இவ்வாறு சிறை வாழ்க்கையும் தான் கிடைக்கின்றது. இவை எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment