15 JUNE 2018
இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் குழப்பநிலை மற்றும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க நிபுணர்கள் குழுவொன்று இன்று இலங்கை வரவுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த ஆய்வில் இணைந்து கொள்வதற்காக அமெரிக்கா விமானப் படைக்கு சொந்தமான ஹூரிகேன் ஹன்டர்ஸ் படையை சேர்ந்த விமானிகள் சிலரும், காலநிலை ஆய்வு குறித்த நிபுணர்களும் இலங்கைக்கு வரவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவர்கள் இலங்கையில் சுமார் 10 நாட்கள் வரை தங்கியிருந்து இந்த ஆய்வினை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதுடன், இதில் இலங்கையை சேர்ந்த நிபுணர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment