Friday, June 15, 2018

பெரும் மகிழ்ச்சிகர செய்தி..!! தொழில்வாய்ப்புகளுக்காக...

15.06.2018

ஐக்கிய அரபு ராச்சியத்தில் அமுலாக்கப்பட்டுள்ள புதிய தொழில் மற்றும் விசா ஒழுங்குகள், இலங்கையில் இருந்து தொழில்வாய்ப்புகளுக்காக அங்கு செல்கின்றவர்களின் உரிமையை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் உள்ள இலங்கை தூதுவர் சிசிர செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டின் தொழிற்துறை அபிவிருத்தி மற்றும் தொழிலாளர்களுக்கு நலன், பாதுகாப்பு உரிமைகள் என்பனவற்றை உறுதி செய்யும் வகையில் தொழில் மற்றும் விசா சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள இலங்கையின் தூதுவர், இதன் மூலம் தொழில்வாய்ப்புக்காக ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு செல்கின்றவர்களுக்கு எதிராக பதிவாகின்ற வன்முறைகளின் அளவு குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment