15 JUNE 2018
இரண்டாயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியொருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்ன பிரதேச சமூர்த்தி அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொலன்ன சமூர்த்தி சமூக வங்கியில் சமூர்த்தி பயனாளி ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் கடனை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த லஞ்சத்தை கோரியுள்ளார்.
இதில் ஆயிரம் ரூபாயை ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டுள்ளதுடன், பின்னர் நேற்றைய தினம் எஞ்சிய பணத்தை பெற்றுக்கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் எம்பிலிபிட்டிய நிதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment