02.12.2018
ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
தற்போதை அரசியல் நிலை குறித்து நேற்று முந்தினம் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இரண்டு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த சந்திப்பிலும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய் கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன், இன்று பிரதமர் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான பிரதமராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment