Saturday, December 1, 2018

விலைச் சூத்திரத்தாலும் விலையை குறைக்க முடியும்

December 02, 2018 

கடந்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால் இதேபோன்று எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க நேற்று தலதா மாளிகைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் இருக்கின்ற நிலை சிறந்ததல்ல என்றும் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் சென்ற தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment