Saturday, December 1, 2018

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் துண்டிக்கப்பட மாட்டாது - ராஜித சேனாரத்ன

01.12.2018

பாராளுமன்றத்தில்  சென்ற தினம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அரச உதவிகள் என்பன துண்டிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துவதற்கு தடை வித்து சென்ற (30) பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதனால், அரச நிதியை அமைச்சுக்கள் பயன்படுத்துவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சென்ற தினம் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

0 comments:

Post a Comment