Saturday, December 1, 2018

வவுணதீவு பொலிஸ் கொலை தொடர்பாக கிளிநொச்சியில் ஒருவர் கைது

01.12.2018

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் காவற்துறையினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்துக்குரிய ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதுடைய குறித்த சந்தேகத்துக்குரியவர் இன்றைய தினம் கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

நேற்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு - வவுணதீவு வீதியில் வவுணதீவிற்கு அருகில் உள்ள காவல்துறை காவலரணில் வைத்து காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment