Sunday, December 2, 2018

நிந்தவூரில் பொதுஜன பெரமுன முஸ்லிம் காரியாலயம் திறந்து வைப்பு,


03.12.2018 (படங்கள்)

அம்பாரை மாவட்டம் நிந்தவூரில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னணி கட்சி காரியாலயம் நிந்தவூரில் நேற்று 02 திறக்கப்பட்டது.

இக் கட்சியின் நிந்தவூர்  அமைப்பாளர் ஜெ.எம்.பைசல் அவர்களின் தலைமையில் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு அதிதியாக  இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லீம் முன்னணியின் தேசிய அமைப்பாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.நெளஷாட் முன்னாள் மேயர் அவர்களும்,
இக் கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளரும், இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான எஸ்.எம்.எம்.இர்ஷாத் (அதாப்) அவர்களும் கலந்து கொண்டு முஸ்லிம் பெரமுன கட்சி காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியை தீர்த்துக்கொள்ள அனைத்து மக்களும் மஹிந்தவின் பக்கம் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலை நடாத்தி ஒரு நிலையான மஹிந்த அரசாங்கத்தை உருவாக்க அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும் என ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது.

இதைத்தொடர்ந்து  நிந்தவூர் தொழில் பயிற்சி அதிகார சபை கேட்போர் கூட மண்டபத்தில் தேசிய அமைப்பாளர் அவர்களினால் தற்போதய அரசியல் தொடர்பாகவும் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்சம்பந்தமாகவும் உரையாற்றிரிந்தார்.

மேலும் இந்நிகழ்வின் போது அம்பாரை மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அனைத்து ஊர் அமைப்பாளர்களும் கலந்து கொண்டு இக்கட்சியின் எதிர்காலம் பற்றியும் உரையாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment