03.12.2018
பேசுவதில் பயனில்லை என்பதை JVP,TNA உட்பட UNP யும் உணரத்தொடங்கியுள்ளது.
பேசுவது பயனுக்கில்லை என்பதில் ஆளும் தரப்பும் உறுதியாக உள்ளது.
இலங்கை மீது உலக நாடுகள் முதல் ஐ.நா வரை அழுத்தங்கள் பல பிரயோகிக்கப்பட்ட போதிலும், பாராளுமன்றத்தில் பல தடவைகள் பெரும்பான்மையினை ரணில் தரப்பு நிரூபணம் செய்தபோதிலும் மஹிந்த ராஜபக்ஷவிடம் கொடுத்த வாக்குறுதியை மீறிச்செல்ல ஜனாதிபதி மைத்திரி இதுவரை தைரியம் கொள்ளவில்லை என்றே எண்ணத் தோணுகிறது.
மைத்திரியின் அதிகாரத்தின் கீழ் பிரதமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்ஷ கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இந்நிலையில் எங்கோ ஒரு நிகழ்வில் நின்றவரை பதறப்பதற அழைத்து வந்து பதவியை கொடுத்து விட்டு மீண்டும் பறிப்பதென்பது மஹிந்த ராஜபக்ஷவின் தன்மானத்தோடு விழையாடும் ஒரு செயலாகவே அமைந்து விடும்.
இத்தனை பெரிய அபகீர்த்தியை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக்சவும் விரும்பவில்லை. மைத்திரியும் அதற்கு துணியவில்லை.
இந்நிலையில் உலகநாடுகளையும் உதறித்தள்ளி விடாமல், மாற்றுத்தரப்பால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பெரும்பான்மையையும் புறந்தள்ளி விடாமல் ஒரு முடிவுக்கு வருவதென்பது அவளவு சுலபமாக இருக்காது.
இந்த இக்கட்டான இடி”ஆப்ப” சிக்கலில் ஆளும் தரப்புக்கு
3 ஆப்சன்தான் உள்ளது!
01.
113 பெரும்பான்மையை நிரூபித்தல்!
———————————————
02.
நீதிமன்ற தீர்ப்பை சாதகமாக பெறுதல்!
————————————————
03.
சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லுதல்!
————————————————
மேற்குறித்த மூன்றில் ஏதாவதொன்றின் மூலம் ஆளும்தரப்பு,தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்பதை நிரூபிக்கவே முயலும்.
இதற்காக டிசம்பர்-5 ற்கு முன்னர் மீண்டும் பல மடங்கு சலுகைகளுடன் பேரம் பேசும் படலம் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படலாம்.
மறுபக்கம் மத்திய வங்கி பிணைமுறிவு மோசடி முதற்கொண்டு இன்னோரன்ன சம்பவங்களினூடாக “பச்சை” கூட்டமைப்பை ஆட்டம் காணச்செய்யும் அதிரடியான முன்னெடுப்புக்களும் மிக தீவிரமாக இடம்பெறலாம்.
இன்னொரு பக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் பிழவினை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.
அதற்கான அத்திவாரமாக தமிழ் அரசியல் கைதிகளின் அதாவது சிறையில் வாடும் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் முயற்சி மும்முரமாக்கப்படலாம்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆளும் தரப்பிற்கு ஆதரவாக வந்தால் சிறையில் வாடும் புலிப்போராளிகளை விடுதலை செய்ய ஆளும் தரப்பு அதிரடி சம்மதம் தெரிவிக்கலாம்.
இதற்கு TNA உடன்படாத போது உட்கட்சி பூசல் உருவாகலாம், தமிழ் மக்கள் மத்தியிலும் TNA மீது அதிருப்தி ஏற்படலாம். அப்போது TNA இரண்டாக பிழவு படலாம். பிழவு படுகின்ற TNA உறுப்பினர்கள் மூலம் ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம்.
எது எப்படியோ துடுப்பு அல்லது துரும்பு இப்போது TNA இன் கைகளில்தான் உள்ளது.
இவை அனைத்தும் பொய்த்துப்போனால் ஆளும் தரப்பின் அடுத்த இலக்கு 7 பேர் கொண்ட நீதிமன்ற தீர்ப்பு.
அது சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அடுத்த கட்டம் ஆளும் தரப்பு சர்வஜன வாக்கெடுப்பின் பக்கமே நகரும், அதுவரை ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.
நன்றி
-அல்மசூறா நியூஸ்






0 comments:
Post a Comment