02.12.2018
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில், இன்று இரவு 7.00 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில், நாளைய தினம் வரை அது பிற்போடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியினை பிரதிநிதித்துப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாஷட் பதியூதீன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது இணக்கப்பாடுகள் எட்டப்படாத விடயம் குறித்து, இன்றைய இந்த சந்திப்பில் ஆராயப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment