December 02, 2018
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின் நாடு சீர்கெட்டு போயுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவும் வேறு வேலைகளை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பலவந்தமாக அமைந்த அரசாங்கத்திற்கு நிரந்தர இருப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்டே அரசாங்கத்தை பலவந்தமாக முன்னெடுத்து செல்ல முயற்சித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு செல்லாது எப்படி நாட்டில் தேர்தலுக்கு செல்ல முடியும்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் அண்மையில், ரணில் விக்ரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடந்ததை அனைவரும் அறிவர். வெளியில் உள்ள மக்களுக்கு தெரியாமல் அவர்கள் இரகசியமாக எதனை பேசினர்.
நாடாளுமன்றத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பதை மகிந்த ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment