November 01, 2018
சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டமை தொடர்பில் துருக்கி தனது உத்தியோகப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 2ம் திகதி முதல் வெளியான ஊடக செய்திகளை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிடுவதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்திற்குள் ஜமால் கஷோகி நுழைந்ததன் பின்னர் அவர் திட்டமிட்ட முறையில் கொலைசெய்யப்பட்டதாக துருக்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கஷோகி கொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது உடல் துண்டுத்துண்டாக வெட்டப்பட்டுள்ளதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் துருக்கியின் பிரதான சட்ட அதிகாரி சவூதி அரேபிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அடுத்த வாரம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment