November 01, 2018
அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேட்சி கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் அவர்கள் மஹிந்த அணியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் சிலர் அமைச்சுப்பதவிகளை ஏற்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே அரசுக்கு ஆதரவளிக்க மஹிந்த அணியுடன் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கோரிக்கைக்கு அமைவாக துமிந்த திஸாநாயக்கவுடன் சில சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அரசை விட்டு வெளியேற உள்ளதாக பரவிய தகவல் இன்று பொய்யானதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசு பக்கம் தாவ தயாராகி இருந்த சிலரின் பாய்ச்சல் ஊர்ஜிதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் நாளை அமைச்சுப்பொறுப்புகளை ஏற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Thanks
Madawala News
0 comments:
Post a Comment