Wednesday, November 21, 2018

வெள்ளிக்கிழமையும் பொது மக்களுக்கான பார்வை கூடம் பூட்டு

21 .11 .2018

எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற அமர்வின் போது, பொது மக்களுக்கான பார்வை கூடமும், சபாநாயகர் விசேட விருந்தினருக்கான கூடமும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

அன்றைய தினம் நாடாளுமன்ற பார்வையாளர் கூடத்திற்கு ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் அன்றைய தினம் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையும் நாடாளுமன்ற அமர்வின் போது, பொது மக்களுக்கான பார்வை கூடமும், சபாநாயகர் விசேட விருந்தினருக்கான கூடமும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment