Wednesday, November 21, 2018

டுவிட்டரில் மோதிக்கொண்ட நாமலும், கனேடிய உயர்ஸ்தானிகரும்..


21-11.2018

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் சந்திக்க வேண்டியது வெளிநாட்டு
அல்ல, பொது மக்களை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தள்ளார்.

"ஒருவேளை எதிர்க்கட்சி தலைவர்கள், பொது மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி தேர்தலுக்கு சென்று மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றினால் இதைவிட சிறந்த சுழல் ஒன்று உருவாகும்" என நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஸவின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன், "சர்வதேச சமூகத்திற்கு குறித்த விடயத்தில் உங்கள் கட்சியின் சகாக்கள் என்ன செய்கிறார்கள் என அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் முகாமகவே" என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நாமல் ராஜபக்ஸ அதிரடியாக பதில் வழங்கியுள்ளார்.

"உங்களின் பதிலிற்கு மிகவும் நன்றி. எனினும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், இலங்கை என்பது இறையாண்மை நாடு. யார் நாட்டை ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சியாளர்கள், பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவதானம் செலுத்த வேண்டும். தேர்தல் உட்பட" என நாமல் ராஜபக்ஸ டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளார்.

0 comments:

Post a Comment