Tuesday, November 6, 2018

ரணில் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு திடிரென கிடைத்த மகிழ்ச்சியான செய்தி


06.11.2018

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு ஏற்கனவே இருந்தவாறே வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை தொடர்பான முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, நளின் பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

இதனடிப்படையில், ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கு கடந்த 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment