Saturday, October 27, 2018

UPDATE புதிய பிரதமரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

27.10.2018

பிரதமரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ். அமரசேகர தமது கடமைகளை இன்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியினால் அவருக்கான இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கட்டளைக்கமைய, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment