Saturday, October 6, 2018

SLPP தலைமைத்துவம்: மஹிந்தவுக்கு ஆசையும் பயமும்!

06.10.2018

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் பெயரில் தான் உருவாக்கிய கட்சியின் பினாமித் தலைவரான ஜி.எல். பீரிசை நீக்கிவிட்டு தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகவே இருப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்ற போதிலும் அவ்வாறான உடனடியாக அவ்வாறு ஒரு முடிவை அவர் எடுக்கப் போவதில்லையென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு கட்சி மாறினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த இழக்க நேரிடும் என்பதே இதற்கான காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரானால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி போகும் என சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sonakarnews

0 comments:

Post a Comment