Saturday, October 27, 2018

பக்கச்சார்பற்றமுறையில் தீர்வு வழங்குவேன் – சபாநாயகர்

October 27, 2018

நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஸ்தீரமற்ற சூழ்நிலைக்கு அரசியலமைப்புக்கு அமைய தீர்மானமொன்றினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சட்டத்திற்கு அமைய பக்கச்சார்பற்றமுறையில் இந்ந நெருக்கடிக்குரிய சிக்கலினை அவிழ்கவுள்ளேன்.

இச் சந்தர்ப்பத்தில் அனைவரும் புத்திசாதுரியத்துடன் அமைதிகாத்து செயற்படுமாறு அரசியல் கட்சிகளினுடைய தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோளினை முன்வைக்கின்றேன்.

முப்படையினரும், பொலிஸாரும் தமது கடமைகளை உரிய வகையில் நாட்டுக்கு வழங்க வேண்டும்.

அத்துடன் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் பொறுப்புடன் தமது கடமைகளை செய்ய வேண்டும்

70 ஆண்டு பழைமை வாய்ந்த பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய அதியுயர் பாராளுமன்றத்தின் கோட்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த விடயத்தை தீர்க்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment