04.10.2018
அரசாங்கத்தை மாற்ற வேண்டிய காலம் தற்போது நெருங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கனேமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வளங்கள் தற்போது வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது நாட்டுக்கு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.
எனவே இதனை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
ஐக்கிய தேசிய கட்சிக்கு தனியே ஆட்சி நடத்த முடியாது. சுதந்திர கட்சியின் தயவுடனேயே அதற்கு இயங்க முடியும்.
எனவே இந்த அரசாங்கத்தை மாற்றும் காலம் வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment